| ஒழிய, கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை, வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள் மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண் தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் வெம் பரல் அதர குன்று பல நீந்தி, யாமே எமியம் ஆக, நீயே ஒழியச் சூழ்ந்தனை ஆயின் - முனாஅது வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின் பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல. அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம் செய்வினை ஆற்றுற விலங்கின், எய்துவை அல்லையோ, பிறர் நகு பொருளே? |