| வண் பறை மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல் குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; பைதலன் பெயரலன் கொல்லோ? ஐ தேய்கு - 'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் கூஉம் கணஃது எம் ஊர்' என ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
என்பது தோழி தலைமகன் குறை கூறியது; பகலே
சிறைப்புறமாக, தோழி
தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன்
கேட்பச் சொல்லியதூஉம்
ஆம்; தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- அவர்
|
| 'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து, உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின் முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின் ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை முளி புல் மீமிசை வளி |
|  |