| ஏர் புகுத்து, குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஓதைத் தெள்விளி புலம்தொறும் பரப்ப, கோழிணர் எதிரிய மரத்த, கவினி, காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த நல் தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ - மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர் தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன அம் கலுழ் மாமை கிளைஇய, நுண் பல் தித்தி, மாஅயோளே? |
|
என்பது தலைமகன்
பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை
நினைந்து சொல்லியது. - சேரமன் நத்தையார்.
|
| மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச் செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண், தளிர் ஏர் மேனி, மாஅயோயே! நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச, கோடை நீடிய பைது அறு காலை, குன்று கண்டன்ன கோட்ட, யாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல் என்றூழ் வியன்குளம் நிறைய வீசி, பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, பல் |
|  |