| சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |