அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   62
Zoom In NormalZoom Out


 
யன்,
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
'யாதோ, மற்று அம் மா திறம் படர்' என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,
நாணி நின்றனெமாக, பேணி,
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?' என்றனன் பையெனப்
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
மகனே தோழி!' என்றனள்.
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே. 
 

என்பது  செவிலித்தாய்க்குத்  தோழி அறத்தொடு நின்றது. - தங்கால்
முடக் கொற்றனார்.
 

 
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்