அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   66
Zoom In NormalZoom Out


 
சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு
அறிவிப்பேம் கொல்? அறியலெம்கொல்?' என
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று - வாழி, தோழி! -'யாக்கை
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்' எனச் செப்பாதீமே.
 

என்பது   தலைமகள்   வேறுபட்டமை   அறிந்த  செவிலித்தாய்க்கு,
தோழி,  'அறத்தொடு   நிற்கும்'   என,  தலைமகள்  சொல்லியது. -
நொச்சிநியமங் கிழார்.
 

 
அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
வள்