அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   67
Zoom In NormalZoom Out


 
எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே.
 

என்பது வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச்
சாத்தனார்
 

 
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம் பெயற்
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
கடவுக; காண்குவம் - பாக! மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்கு