| சுரை மடிய, கனைஅல்ஆம் குரல காற் பரி பயிற்றி, படு மணி மிடற்ற பய நிரை ஆயம் கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, மனைமனைப் படரும் நனை நகு மாலை, தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் புன் காழ் நெல்லிப் பைங் காய் தின்றவர் நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, 'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, வருகுவைஆயின், தருகுவென் பால்' என, விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, திதலை அல்குல் எம் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |