அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   70
Zoom In NormalZoom Out


 
நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. 
 

என்பது   பரத்தை   மனைக்குச்  செல்கின்ற பாணன் தன் மனைக்கு
வந்தானாக, தோழிக்குத்  தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை
வாணிகன் இளவேட்டனார்.
 

 
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
குறுங்