| கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வழி பொர, பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, யாமே எமியம்ஆக, தாமே பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ - கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் முதுநீர் முன்துறை முசிறி முற்றி, களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, பானாட் கங்குலும் பகலும் ஆனாது அழுவோள் - ஆய் சிறு நுதலே? |
|
என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து
சொல்லியது.- நக்கீரர்.
|
| இன் இசை உருமொடு கனை துளி தலைஇ, மன் உயிர் மடிந்த பானாட் கங்குல், காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது, வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத் தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, கூதிர், இல் செறியும் குன்ற நாட! வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ் விளங்கு தொடி முன்கை வளைந்து |
|  |