அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   73
Zoom In NormalZoom Out


 
பாராட்டிய காலையும் உள்ளார்,
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.
 

என்பது  தலைமகன்  பிரிவின்கண்  வேறுபட்ட  கிழத்திக்குத் தோழி
சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன்.
 

 
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும்