அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   74
Zoom In NormalZoom Out


 
செறிய
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
 

என்பது தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-
குடவாயிற் கீரத்தனார்.
 

 
நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் -
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல் வாழி, தோழி! - தாழாது,
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர்ஆதலோ அரிதே - முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
 

என்பது தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத்
தோழி