| பொலங் கெழு பூழி பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, மன்று நிறை பைதல் கூர, பல உடன் கறவை தந்த கடுங் கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ, முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை, மட மயில் அன்ன என் நடை மெலி பேதை தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், 'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் சேக் கோள் அறையும் தண்ணுமை கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. |