| செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல கடுநீர் வரித்த செந் நிலமருங்கின், விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை புலம்பு கொள் மாலை கேட்டொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |