| கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச் சென்றன்ன, கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு அரியவால்' என அழுங்கிய செலவே! |