அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   79
Zoom In NormalZoom Out


 
புதுவதின்
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது,
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக்
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
தானே புகுதந்தோனே! யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழங் கணோட்டமும் நலிய,
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே. 
 

என்பது பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - செல்லூர்க்