அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   87
Zoom In NormalZoom Out


 
பல தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
வன்புறை இன்சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென் மன்னோ - அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்
கல்லாக் கோவலர் ஊதும்
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! 
 

என்பது   தலைமகன்   பிரிவின்கண்   அழிந்த கிழத்தி வற்புறுத்தும்
தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்.
 

 
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர்ஆயின் - நல்நுதல்,
செயிர் தீர் கொள்கை, சில்மொழி, துவர் வாய்,
அவிர்