| தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம்மா மேனி, ஐது அமை நுசுப்பின்; பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; மெல் இயல் குறுமகள்! - புலந்து பல கூறி ஆனா நோயை ஆக, யானே பிரியச் சூழ்தலும் உண்டோ, அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?' |
|
என்பது 'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியேன்'
எனத் தலைமகன் சொல்லியது. - மதுரைப்போத்தனார்
|
| மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின், ஆனாது, கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? |
|  |