அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   89
Zoom In NormalZoom Out


 
என,
ஆதி மந்தி பேதுற்று இனைய,
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்,
அம் தண் காவிரி போல,
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின், யானே. 
 

என்பது  'தலைமகனை  நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட
பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பரணர்.
 

 
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய, நெஞ்சே! - வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
வானவன் மறவன், வணங்கு வில் தடக்கை,
ஆனா நறவின்