| குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை, இருஞ்சேற்று அள்ளல் நாட்புலம் போகிய கொழுமீன் வல்சிப் புன்தலைச் சிறாஅர், நுண்ஞாண் அவ்வலைச் சேவல் பட்டென, அல்குறு பொழுதின் மெல்குஇரை மிசையாது, பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, அம்கண் பெண்ணை அன்புற நரலும் சிறுபல் தொல்குடிப் பெருநீர்ச் சேர்ப்பன், கழிசேர் புன்னை அழிபூங் கானல், |