| தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் மணவா முன்னும் எவனோ- தோழி! - வெண்கோட்டு யானை விறற்போர்க் குட்டுவன் தெண்திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, சுரும்புஉண மலர்ந்த பெருந்தண் நெய்தல் மணிஏர் மாண்நலம் ஒரீஇ, பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே? |
| |
|
என்பது இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கீரர். |
| | |
| வானம் பெயல்வளம் கரப்ப, கானம் உலறி இலைஇல வாக, பல உடன் ஏறுடை ஆயத்து இனம்பசி தெறுப்ப, கயன்அற வறந்த கோடையொடு நயன்அறப் பெருவரை நிவந்த மருங்கில், கொடுவரிப் புலியொடு பொருது சினம்சிறந்து, வலியோடு உரவுக்களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப்பரல், சிறு |
|  |