அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   262
Zoom In NormalZoom Out


 

என்பது பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ.
 

  
கூறாய், செய்வது - தோழி! - வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள்உகுத்து அலமரும்; மென்முறிச்
சிறுகுளகு அருந்து, தாய்முலை பெறாஅ,
மறிகொலைப் படுத்தல் வேண்டி, வெறிபுரி
ஏதில்வேலன் கோதை துயல்வரத்
தூங்கும் ஆயின், அதூஉம் நாணுவல்;
இலங்குவளை நெகிழ்ந்த செல்லல்; புலம்படர்ந்து,
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி, நடுநாள்,
வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன்
கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்
உடுஉறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரிஇணர் சிதறி, தேன்சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக் காலே!
 
 

என்பது வெறி அச்சுறீஇ, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்.