| இலைஒழித்து உலறிய புன்தலை உலவை வலைவலந் தனைய ஆக, பலஉடன் சிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின், துகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெங் களரி, குயிற்கண் அன்ன குரூஉக்காய் முற்றி, மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி உகாஅய் மென்சினை உதிர்வன கழியும் வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே, செல்ப என்ப - தோழி! - யாமே, பண்புஇல் கோவலர் தாய்பிரித்து யாத்த நெஞ்சுஅமர் குழவி போல, நொந்துநொந்து, இன்னா மொழிதும் என்ப; என்மயங் கினர்கொல், நம்காத லோரே? |