அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   264
Zoom In NormalZoom Out


 
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த்தலைப் பூவின் புதல்இவர் ஈங்கை
நெய்த்தோய்த் தன்ன நீர்நனை அம்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம்பூப் பயில, அகல்வயல்
கதிர்வார் காய்நெல் கட்குஇனிது இறைஞ்ச,
சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்,
'காய்சின வேந்தன் பாசறை நீடி,
நம்நோய் அறியா அறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர் கொல்?' என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் - தோழி! என்தனிமை யானே.
 
 

என்பது  பருவ  வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்.
 

  
நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்ப,
குன்றுகோடு அகைய, கடுங்கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை,
நிலவுநிற மருப்பின் பெருங்கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள்