அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   265
Zoom In NormalZoom Out


 
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
பல்மர ஒருசிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்தி,
கடல்நீர் உப்பின் கணம்சால் உமணர்
உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும்,
புடையல்அம் கழற்கால் புல்லி குன்றத்து,
நடைஅருங் கானம் விலங்கி, நோன்சிலைத்
தொடைஅமை பகழித் துவன்றுநிலை வடுகர்,
பிழிஆர் மகிழர், கலிசிறந்து ஆர்க்கும்
மொழி பெயர்தே எம்இறந்தனர் ஆயினும்,
பழிதீர் மாண்நலம் தருகுவர் மாதோ -
மாரிப் பித்திகத்து ஈர்இதழ் புரையும்
அம்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்,
மணம்கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்குநிலை பெற்ற தடமென் தோளே.
 
 

என்பது பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மா