| கிளையா, நீரொடு பொருத ஈர்இதழ் மழைக்கண் இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்ப, கால்நிலை செல்லாது, கழிபடர்க் கலங்கி, நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு, அறல்மருள் கூந்தலின் மறையினள்,' திறல்மாண்டு திருந்துக மாதோ, நும்செலவு' என வெய்துஉயிரா, பருவரல் எவ்வமொடு அழிந்த பெருவிதுப் புறுவி பேதுறு நிலையே. |
| |
|
என்பது இடைச்சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார். |
| | |
| நாள்வலை முகந்த கோள்வல் பரதவர் நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், பறிகொள் கொள்ளையர், மறுக உக்க மீன்ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை, எல்லை தண்பொழில் சென்றென, செலீஇயர், தேர்பூட்டு அயர ஏஎய், வார்கோல் செறிதொடி திருத்தி, பாறுமயிர் நீவி, 'செல்இனி, மடந்தை! நின்தோழி |
|  |