அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   271
Zoom In NormalZoom Out


 
யொடு, மனை' எனச்
சொல்லிய அளவை, தான்பெரிது கலுழ்ந்து,
தீங்குஆ யினள்இவள் ஆயின், தாங்காது,
நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்
பிறிதுஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேணா,
இருங்கலி யாணர்எம் சிறுகுடித் தோன்றின்,
வல்எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மாறுஆ யினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என,
எமர்குறை கூறத் தங்கி, ஏமுற,
இளையரும் புரவியும் இன்புற, நீயும்
இல்உறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.
 
 

என்பது பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -
உலோச்சனார். மணிமிடை பவளம் முற்றும். நித்திலக் கோவை
 

  
'வறன்உறு செய்தியின் வாடுபு வருந்தி,
படர்மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறுநனி