அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   272
Zoom In NormalZoom Out


 
ஆன்றிகம்' என்றி - தோழி! -
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,
நீர்வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து,
ஊர்இஃது என்னாஅர், தீதுஇல் வாழ்க்கை,
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
பாடுஇன் தெண்கிணை கறங்க, காண்வர,
குவிஇணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
முளரித் தீயின் முழங்குஅழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை,
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர,
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப,
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மான, சீர்அமைத்து,
சில்அரி கறங்கும் சிறுபல் இயத்தொடு
பல்ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்,
இரும்பேர் ஒக்கல்