அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   273
Zoom In NormalZoom Out


 
கோடியர் இறந்த
புன்தலை மன்றம் காணின், வழிநாள்,
அழுங்கல் மூதூர்க்கு இன்னா தாகும்;
அதுவே மருவினம், மாலை; அதனால்
காதலர் செய்த காதல்
நீடுஇன்று மறத்தல் கூடுமோ, மற்றே?
 
 

என்பது  பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச்
சொல்லியது. - அதியன் விண்ணத்தனார்.
 

  
சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம்தோடு, அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல்வரை நாடனொடு அருவி ஆடியும்,
பல்இதழ் நீலம் படுசுனைக் குற்றும்,
நறுவீ வேங்கை இனவண்டு ஆர்க்கும்
வெறிகமழ் சோலை நயந்துவிளை யாடலும்
அரிய போலும் - காதல்அம் தோழி! -
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்புஎனக் கவினிய பெருங்குரல் ஏனல்,
கிளிபட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என,
நம்அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில்சுணங்கு அணிந்த, செறிந்துவீங்கு,