அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   274
Zoom In NormalZoom Out


 
இளமுலை,
மெல்இயல் ஒலிவரும் கதுப்பொடு,
பல்கால் நோக்கும் - அறன்இல் யாயே.
 
 

என்பது பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச்
சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.
 

  
இடைபிறர் அறிதல்அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பல்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்,
மறம்மிகு தானை, பசும்பூண், பொறையன்
கார்புகன்று எடுத்த சூர்புகல் நனந்தலை
மாஇருங் கொல்லி உச்சித் தாஅய்,
ததைந்துசெல் அருவியின் அலர்எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குழீஇயினம் காலைப் போகி,
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரைதேர் கொட்பின் ஆகி, பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு,