அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   275
Zoom In NormalZoom Out


 
வருவர்என்று உணர்ந்த, மடம்கெழு, நெஞ்சம்!
ஐயம் தெளியரோ, நீயே; பலஉடன்
வறல்மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
கணநிரை மணியின், ஆர்க்கும் சுரன்இறந்து,
அழிநீர் மீன் பெயர்ந் தாங்கு, அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின், யானே.
 
 

என்பது தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்.
 

  
இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை,
நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தவைபோல்,
சூர்பனிப் பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ, வான்நவின்று,
குரூஉத்துளி பொழிந்த பெரும்புலர் வைகறை,
செய்துவிட் டன்ன செந்நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள்அறல் பருகி,
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை,
வலம்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதிய,