| சுரும்புஇமிர்பு ஊத, பிடவுத் தளைஅவிழ, அரும்பொறி மஞ்ஞை ஆல, வரிமணல் மணிமிடை பவளம் போல, அணிமிகக் காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன் ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப, புலன்அணி கொண்ட கார்எதிர் காலை, 'ஏந்துகோட்டு யானை வேந்தன் பாசறை வினையொடு வேறுபுலத்து அல்கி, நன்றும் அறவர் அல்லர் நம் அருளா தோர், என, நம்நோய் தன்வயின் அறியாள், எம்நொந்து புலக்கும்கொல், மாஅ யோளே? |