அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   277
Zoom In NormalZoom Out


 
மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து,
ஓர்உயிர் மாக்களும் புலம்புவர் மாதோ;
அருளி லாளர் பொருள்வயின் அகல,
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யான்எவன் உளெனோ - தோழி! - தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
ஒருதனி அன்றில் உயவுக்குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனைஎரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீம்குழல் கேட்டே?
 
 

என்பது பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். -
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்.
 

  
பெரும்பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட,
வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்
கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து,
பழன யாமை பசுவெயில் கொள்ளும்
நெல்லுடை மறு