அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   278
Zoom In NormalZoom Out


 
கின் நன்னர் ஊர!
இதுவோ மற்றுநின் செம்மல்? மாண்ட
மதிஏர் ஒள்நுதல் வயங்குஇழை ஒருத்தி -
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
ஆய்இதழ் மழைக்கண் நோய்உற நோக்கி,
தண்நறுங் கமழ்தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் - சிறுதுனி செய்து எம்
மணல்மலி மறுகின் இறந்திசி னோளே.
 
 

என்பது தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார்.
 

  
'சிறுநுதல் பசந்து, பெருந்தோள் சாஅய்,
அகல்எழில் அல்குல் அவ்வரி வாட,
பகலும் கங்குலும் மயங்கி, பையென,
பெயல்உறு மலரின் கண்பனி வார,
ஈங்குஇவள் உழக்கும்' என்னாது, வினைநயந்து,
நீங்கல் ஒல்லுமோ - ஐய! - வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையல்அம் கடாஅம் செருக்கி, மதம்சிறந்து,
இயங்குநர்ச் செகுக்கும் எய்படு