| நனந்தலை, பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர புதல்இவர் பொதியில், கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து உடன்உறை பழமையின் துறத்தல் செல்லாது, இரும்புறாப் பெடையொடு பயிரும் பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
| |
|
என்பது பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு
விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன்தேவனார். |
| | |
| உழுவையொடு உழந்த உயங்குநடை ஒருத்தல் நெடுவகிர் விழுப்புண் கழாஅ, கங்குல் ஆலி அழிதுளி பொழிந்த வைகறை, வால்வெள் அருவிப் புனல்மலிந்து ஒழுகலின், இலங்குமலை புதைய வெண்மழை கவைஇ, கலம்சுடு புகையின் தோன்றும் நாட! இரவின் வருதல் எவனோ? பகல்வரின், தொலையா வேலின் வண்மகிழ் எந்தை களிறுஅணந்து எய்தாக் கல்முகை இத |
|  |