அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   280
Zoom In NormalZoom Out


 
ணத்து,
சிறுதினைப் படுகிளி எம்மொடு ஓப்பி,
மல்லல் அறைய மலிர்சுனைக் குவளைத்
தேம்பாய் ஒண்பூ நறும்பல அடைச்சிய
கூந்தல் மெல்அணைத் துஞ்சி, பொழுதுபட,
காவலர்க் கரந்து, கடிபுனம் துழைஇய
பெருங்களிற்று ஒருத்தலின், பெயர்குவை,
கருங்கோற் குறிஞ்சிநும் உறைவுஇன், ஊர்க்கே.
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார்.
வயவாள் எறிந்து, வில்லின் நீக்கி
பயம்நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்புஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப்புழுக்கு உண்ட வான்கண் அகல்அறை,
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
காடுமிக நெடிய என்னார், கோடியர்
பெரும்படைக் குதிரை,