அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   281
Zoom In NormalZoom Out


 
நல்போர், வானவன்
திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம்செலின், எவனோ - தோழி! - காம்பின்
வனைகழை உடைந்த கவண்விசைக் கடிஇடிக்
கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்
தண்பெரும் படாஅர் வெரூஉம்
குன்றுவிலங்கு இயவின், அவர்சென்ற, நாட்டே?
 
 

என்பது  பிரிவிடை   வேறுபட்ட   தலைமகளது   வேறுபாடு  கண்டு வேறுபட்ட  தோழிக்குத்   தலைமகள்  சொல்லியது.  -  கருவூர்க் 
கந்தப்பிள்ளைச் சாத்தனார்.
 

  
கடுந்தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை, அழிவுமுந் துறுத்து,
பல்நாள் வந்து, பணிமொழி பயிற்றலின்,
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு
இவளும் பெரும்பே துற்றனள்; ஓரும்
தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்ட,
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்,
பெருமடம் உடையரோ, சிறிதே; அதனால்,
குன்றின் தோன்