அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   282
Zoom In NormalZoom Out


 
றும் குவவுமணற் சேர்ப்ப!
இன்றுஇவண் விரும்பா தீமோ! சென்று, அப்
பூவிரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய - ஆங்க
உப்புஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப்படு பேடை இரிய, குரைத்துஎழுந்து
உரும்இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலிஎம் சிறுநல் ஊரே.
 
 

என்பது தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது. - நக்கீரனார்.
 

  
இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று,
அருங்கடிக் காப்பின் அகல்நகர் ஒருசிறை,
எழுதி யன்ன திண்நிலைக் கதவம்
கழுதுவழங்கு அரைநாள், காவலர் மடிந்தென,
திறந்து நப்புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர்
இம்மை உலகத்து இல்'எனப் பல்நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
பயம்தலைப் பெயர்ந்து மாதிரம் வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவிஅடை தீரத் தேக்கி