அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   283
Zoom In NormalZoom Out


 
லைப் பகுக்கும்
புல்லி நல்நாட்டு உம்பர், செல்அருஞ்
சுரம்இறந்து ஏகினும், நீடலர் -
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசி னோரே.
 
 

என்பது பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மாமூலனார்.
 

  
நெஞ்சுஉடம் படுதலின் ஒன்றுபுரிந்து அடங்கி,
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
வரையக் கருதும் ஆயின், பெரிது உவந்து,
ஓங்குவரை இழிதரும் வீங்குபெயல் நீத்தம்,
காந்தள்அம் சிறுகுடிக் கௌவை பேணாது,
அரிமதர் மழைக்கண் சிவப்ப, நாளைப்
பெருமலை நாடன் மார்பு புணைஆக,
ஆடுகம் வம்மோ - காதல் அம்தோழி!
வேய்பயில் அடுக்கம் புதையக்கால் வீழ்த்து,
இன்இசை முரசின் இரங்கி, ஒன்னார்
ஓடுபுறம் கண்ட, தாள்தோய் தடக்கை,
வெல்போர் வழுதி செல்சமத்து உயர்த்த
அடுபுகழ் எஃகம் போல,
கொடிபட மின்னிப் பாயின்றால், மழையே!