அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   284
Zoom In NormalZoom Out


 

என்பது தலைமகன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது; தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். -மதுரை மருதன் இளநாகனார்.
 

  
'இனிப்பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என
அணிக்கவின் வளரமுயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்றஆறு நினைந்து, அல்கலும்,
குளித்துப் பொருகயலின் கண்பனி மல்க,
ஐய ஆக வெய்ய உயிரா,
இரவும் எல்லையும் படர்அட வருந்தி,
அரவுநுங்கு மதியின் நுதல்ஒளி கரப்ப,
தம்அலது இல்லா நம்இவண் ஒழிய,
பொருள்புரிந்து அகன்றனர் ஆயினும், அருள்புரிந்து,
வருவர் - வாழி, தோழி! - பெரிய
நிதியம் சொரிந்த நீவி போலப்
பாம்புஊன் தேம்பும் வறம்கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணைஇடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி,
ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
இல்வழிப் படூஉம்