| 'நீலத்து அன்ன நீர்பொதி கருவின், மாவிசும்பு அதிரமுழங்கி, ஆலியின் நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, இனம்தேர் உழவர் இன்குரல் இயம்ப, மறியுடை மடப்பிணை தழீஇ, புறவின் திரிமருப்பு இரலை பைம்பயிர் உகள, ஆர்பெயல் உதவிய கார்செய் காலை, நூல்நெறி நுணங்கிய கால்நவில் புரவி கல்லெனக் கறங்குமணி இயம்ப, வல்லோன் வாச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர் ஈர்ம்புறவு இயங்குவழி அறுப்ப, தீம்தொடைப் பையுள் நல்யாழ் செவ்வழி பிறப்ப, இந்நிலை வாரார்ஆயின், தம்நிலை எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, கடவுட் கற்பின் மடவோள் கூற, செய்வினை அழிந்த மையல் நெஞ்சின் துனிகொள் |