அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   286
Zoom In NormalZoom Out


 
பருவரல் தீர, வந்தோய்!
இனிது செய்தனையால்; வாழ்க, நின்கண்ணி!
வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
பெருந்தார் கமழும், விருந்துஒலி, கதுப்பின்
இன் நகை இளையோள் கவவ,
மன்னுக, பெரும!நின் மலர்ந்த மார்பே!
 
 

என்பது வினைமுற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. -
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்.
 

  
'கூழையும் குறுநெறிக் கொண்டன; முலையும்
சூழி மென்முகம் செப்புடன் எதிரின;
பெண்துணை சான்றனள், இவள்' எனப் பல்மாண்
கண்துணை ஆக நோக்கி, நெருநையும்,
அயிர்த்தன்று மன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
அறியா மையின் செறியேன், யானே;
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியல்நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று, வறுஞ்சுனைக்கு ஒல்கி,
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
கோடை உதிர்த்த குவிகண் பசுங்காய்,
அறுநூல் பளிங்