| கின் துளைக்காசு கடுப்ப, வறுநிலத்து உதிரும் அத்தம், கதுமென, கூர்வேல் விடலை பொய்ப்பப் போகி, சேக்குவள் கொல்லோ தானே - தேக்கின் அகல்இலை கவித்த புதல்போல் குரம்பை, ஊன்புழுக்கு அயரும் முன்றில், கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே. |
| 'துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை, அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து, தூங்குசேற்று அள்ளல் துஞ்சி, பொழுதுபட, பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து, குரூஉக்கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் போர்செறி மள்ளரின் புகுதரும் ஊரன் தேர்தர வந்த, தெரிஇழை, நெகிழ்தோள், ஊர்கொள் கல்லா, மகளிர் தரத்தர, பரத்தைமை தாங்கலோ இலென்' என |