அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   288
Zoom In NormalZoom Out


 
வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ? - மனைகெழு மடந்தை!
அதுபுலந்து உறைதல் வல்லி யோரே,
செய்யோள் நீங்க, சில்பதம் கொழித்து,
தாம்அட்டு உண்டு, தமியர் ஆகி,
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப,
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்ம, அஃது உடலு மோரே!
 
 

என்பது தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச்
சொல்லியது. -ஓரம்போகியார்.
 

  
"மாக விசும்பின் மழைதொழில் உலந்தென,
பாஅய் அன்ன பகல்இருள் பரப்பி,
புகைநிற உருவின் அற்சிரம் நீங்க,
குவிமுகை முருக்கின் கூர்நுனை வைஎயிற்று
நகைமுக மகளிர் ஊட்டுஉகிர் கடுக்கும்
முதிராப் பல்இதழ் உதிரப் பாய்ந்து,உடன்
மலர்உண் வேட்கையின் சிதர்சிதர்ந்து உகுப்ப,
பொன்செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல,
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்குசினை நறுவீ கோங்குஅலர் உறைப்ப,