அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   289
Zoom In NormalZoom Out


 
துவைத்து எழுதும்பி, தவிர்இசை விளரி
புதைத்து விடுநரம்பின், இம்மென இமிரும்
ஆன்ஏ முற்ற காமர் வேனில்,
வெயில்அவிர் புரையும் வீததை மராஅத்துக்
குயில்இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்?'என மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தன மாக, நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
வந்துநின் றனரே காதலர்; நந்துறந்து
என்னுழி யதுகொல் தானே - பல்நாள்
அன்னையும் அறிவுற அணங்கி,
நல்நுதல் பாஅய பசலை நோயே?
 
 

என்பது தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.
- வடமோதங்கிழார்.
 

  
கான மான்அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனிஉரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இரவழங்கு சிறுநெறி தமியை வருதி -