| வரைஇழி அருவிப் பாட்டொடு பிரசம் முழவுசேர் நரம்பின் இம்மென இமிரும், பழவிறல் நனந்தலைப் பயமலை நாட! - மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ இன்றுதலை யாக வாரல்; வரினே, ஏம்உறு துயரமொடு யாம்இவண் ஒழிய, எக்கண்டு பெயருங் காலை, யாழநின் கல்கெழு சிறுகுடி எய்திய பின்றை, ஊதல் வேண்டுமால் சிறிதே - வேட்டொடு வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின் நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே! |