அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   291
Zoom In NormalZoom Out


 
நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின், நுண்கேழ் மாமை,
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நல்நிறத்து எழுந்த, சுணங்குஅணி வனமுலை,
சுரும்புஆர் கூந்தல், பெருந்தோள், இவள்வயின்
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும்பொருள்
எய்துக மாதோ நுமக்கே; கொய்தழைத்
தளிர்ஏர் அன்ன, தாங்குஅரு மதுகையள்,
மெல்லியள், இளையள், நனிபேர் அன்பினள்,
'செல்வேம்' என்னும் நும்எதிர்,
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!
 
 

என்பது செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச்
சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்.
 

  
ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ,
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்,
தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும்
கானல்அம் சிறுகுடி, பெருநீர்ச் சேர்ப்ப!
மலர்ஏர் உண்கண் எம்தோழி