| எவ்வம் அலர்வாய் நீங்க, நீஅருளாய் பொய்ப்பினும், நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம் அடும்புஅமர் எக்கர் அம்சிறை உளரும், தடவுநிலைப் புன்னைத் தாதுஅணி, பெருந்துறை நடுங்குஅயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் வண்டற் பாவை சிதைய வந்து, நீ தோள்புதிது உண்ட ஞான்றை, சூளும் பொய்யோ, கடல்அறி கரியே? |
| |
|
எது பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார். |
| | |
| பசித்த யானைப் பழங்கண் அன்ன வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள்விளி விசித்துவாங்கு பறையின் விடரகத்து இயம்ப, கதிர்க்கால் அம்பிணை உணீஇய, புகல்ஏறு குதிர்க்கால் இருப்பை வெண்பூ உண்ணாது, ஆண்குரல் விளிக்கும் சேண்பால் வியன்சுரைப் படுமணி இனநிரை உணீஇய, கோவலர் விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல், கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும் புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர், துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ? கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ? எவ்வினை செயுங்கொல்? நோகோ யானே! - அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ, யாய்அறி வுறுதல் அஞ்சி, வேய்உயர் பிறங்கல் மலைஇறந் தோளே. |
| |
|
எது மகட்போக்கிய |
|  |