|
செவிலி சொல்லியது. - கயமனார். |
| | |
| வயங்குவெயில் ஞெமியப் பாஅய், மின்னுவசிபு, மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல், ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப, இறுவரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, பாம்புஎறி கோலின் தமியை வைகி, தேம்புதி கொல்லோ? - நெஞ்சே! - உரும்இசைக் களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின், ஒளிறுவேற் தானைக் கடுந்தேர்த் திதியன் வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பில், பிறைஉறழ் மருப்பின், கடுங்கண், பன்றிக் குறைஆர் கொடுவரி குழுமும் சாரல், அறைஉறு தீம்தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா ஏற்றுஅரு நெடுஞ்சிமை, புகல்அரும், பொதியில் போலப் பெறல் அருங் குரையள்,எம் அணங்கி யோளே! |
| |
|
எது அல்ல குறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - பரணர். |
| | |
| இம்மென் பேர்அலர், இவ்ஊர், நம்வயின் செய்வோர் ஏச்சொல் வாட, காதலர் வருவர் என்பது வாய்வ தாக, ஐய, செய்ய, மதன்இல, சிறியநின் அடிநிலன் உறுதல் அஞ்சி, பையத் தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, காணிய வம்மோ? - கற்புமேம் படுவி! - பலவுப்பல தடைஇய வேய்பயில் அடுக்கத்து, யானைச் செல்இனம் கடுப்ப, வானத்து வயங்குகதிர் மழுங்கப் பாஅய், பாம்பின் பைபட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு ஆலி அழிதுளி தலைஇக் கா |
|  |