அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   295
Zoom In NormalZoom Out


 
பொலிந்த புகற்சியின், நாடுகோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
வள்உயிர் மாக்கிணை கண்அவிந் தாங்கு,
மலைகவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம்
வெய்ய மன்ற; நின் வைஎயிறு உணீஇய,
தண்மழை ஒருநாள் தலையுக! ஒள்நுதல்,
ஒல்குஇயல், அரிவை! நின்னொடு செல்கம்;
சில்நாள் ஆன்றனைஆக' என, பல்நாள்,
உலைவுஇல் உள்ளமொடு வினைவலி உறீஇ,
எல்லாம் பெரும்பிறி தாக, வடாஅது,
நல்வேற் பாணன் நல்நாட்டு உள்ளதை,
வாள்கண் வானத்து என்றூழ் நீள்இடை,
ஆள்கொல் யானை அதர்பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப் போகி,
ஒழியச் சென்றோர் மன்ற;
பழிஎவன் ஆம்கொல், நோய்தரு பாலே?
 
 

எது கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்.
 

  
ஊரல் அவ்வாய் உருத்த தித்தி,
பேர்அமர் மழைக்கண், பெருந்தோள், சிறுநுதல்,
நல்லள் அம்ம, குறுமகள் - செல்வர்
நெடுங்கொடி நுடங்கும் மட்ட வாயில்,
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம்பா ராட்டி, நடைஎழில் பொலிந்து,
விழவில் செலீஇயர் வேண்டும் - வென்வேல்
இழைஅணி யானைச் சோழர் மறவ